என்னில் ஒருவன்

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா... மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா... :)
Showing posts with label First Post. Show all posts
Showing posts with label First Post. Show all posts

Saturday, December 11, 2010

முதல் பதிவு...

இத்துனை நாட்கள் பதிவுலகில் வாசகனாக மட்டும் இருந்துவிட்டு, நான் கற்ற, என்னை வளர்த்த, ஏதோ எனக்கு தெரிந்த தமிழை எழுத்தில் பதிக்க எண்ணியதன் விளைவு... பொன்னுவின் செல்வன்.

எழுத வேண்டும் என்று பதிவஞ்சல் தொடங்கிவிட்டேன். ஆனால் ஒரு வார காலம் முதல் பதிவாக என்ன எழுதுவது என்று எண்ணி தலையை பிய்த்துகொண்டிருந்தேன். இறுதியில் ஒன்றும் விளங்காதவனாய் இந்த காவியத்தை( :D) வடித்திருக்கிறேன்.

இதன் மூலம் ஏதோ சாதிக்க போகிறேன் என்றெல்லாம் உறுதியாக எண்ணத் தோன்றவில்லை. ஆனால் எனது நட்பு வட்டம் பள்ளி, கல்லூரி, பணியிடம் தவிர்த்து விரிவடைய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன்.

இத்தகைய புது அனுபவங்களை எதிர்நோக்கி வரும் இந்த குழந்தையை தங்கள் அன்புக்கரங்களால் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி...