என்னில் ஒருவன்

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா... மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா... :)

Saturday, December 11, 2010

முதல் பதிவு...

இத்துனை நாட்கள் பதிவுலகில் வாசகனாக மட்டும் இருந்துவிட்டு, நான் கற்ற, என்னை வளர்த்த, ஏதோ எனக்கு தெரிந்த தமிழை எழுத்தில் பதிக்க எண்ணியதன் விளைவு... பொன்னுவின் செல்வன்.

எழுத வேண்டும் என்று பதிவஞ்சல் தொடங்கிவிட்டேன். ஆனால் ஒரு வார காலம் முதல் பதிவாக என்ன எழுதுவது என்று எண்ணி தலையை பிய்த்துகொண்டிருந்தேன். இறுதியில் ஒன்றும் விளங்காதவனாய் இந்த காவியத்தை( :D) வடித்திருக்கிறேன்.

இதன் மூலம் ஏதோ சாதிக்க போகிறேன் என்றெல்லாம் உறுதியாக எண்ணத் தோன்றவில்லை. ஆனால் எனது நட்பு வட்டம் பள்ளி, கல்லூரி, பணியிடம் தவிர்த்து விரிவடைய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன்.

இத்தகைய புது அனுபவங்களை எதிர்நோக்கி வரும் இந்த குழந்தையை தங்கள் அன்புக்கரங்களால் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி...

7 comments:

 1. பதிவுலகிற்கு நல்வரவு...
  பார்க்கும் போதெல்லாம் கல்கியின் காவியம் பொன்னியின் செல்வன் நினைவுக்கு வரும் வகையில் - பொன்னுவின் செல்வன் - நல்ல பெயர்த் தேர்வு..

  ReplyDelete
 2. மிக்க நன்றி நண்பரே...

  எனக்கு மிகவும் பிடித்த நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் எனது தந்தையின் பெயர் பொன்னுசாமி இவ்விரண்டின் கலவையே பொன்னுவின் செல்வன்.

  ReplyDelete
 3. உங்களை வலையுலகம் இருகரம் ஏந்தி வரவேற்கிறது

  ReplyDelete
 4. word verification- ஐ நீக்கிவிடவும் நண்பரே....நிறைய பேர் கருத்து சொல்ல அது தடையாக இருக்கும்

  ReplyDelete
 5. வருக சதீஷ்
  தருக பல பதிவுகள்
  பெருக உங்கள் வாசகர்கள்.

  ReplyDelete